தமிழகத்திலேயே முதல் முறையாக கடலூர் மாவட்டம் பெண்ணாடம் பகுதியில் கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தும் மையத்தினை துவங்கி வைத்தார் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. கொரோனா பேரிடர் காலத்தில் தமிழக அரசு பொதுமக்களை அனைவரையும் கொரோன தடுப்பூசி போடும் படி அறிவுறுத்தியது.ஆனால் கர்ப்பிணி பெண்களுக்கென தடுப்பூசி மையம் தனியாக தொடங்கப்படவில்லை.இந்த நிலையில் பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் கர்ப்பிணிப் பெண்களுக்கும் தடுப்பூசி செலுத்தலாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அனுமதி அளித்தது.இதைத் தொடர்ந்து தற்போது தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தும் பணியை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதைத் தொடங்கி வைத்தார் உதயநிதி ஸ்டாலின்.இதற்கான நிகழ்ச்சி சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்ரமணியம் தலைமையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மா சுப்ரமணியம், தமிழகத்தில் தொற்று குறைந்து வருவது மகிழ்ச்சியை அளிக்கிறது . அனைத்து மாவட்டங்களிலும் விரைவில் கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும் என்றும் தெரிவித்தார்.