Phone/WhatsApp : +91 72000 33317

Reg.No. TN-02-0040998

பெற்றோர்களே உஷார் ! 20 பெண்களை பலாத்காரம் செய்த 14 வயது சிறுவன்..

download-6

திருவனந்தபுரம்: 9-ம் வகுப்பு மாணவன் ஒருவன், 20 பெண்களை பலாத்காரம் செய்திருக்கிறான் என்றால் நம்ப முடிகிறதா.. இப்படி ஒரு கொடுமை கடவுளின் தேசம் என்று போற்றப்படும் பக்கத்து மாநிலத்தில் நடந்துள்ளது.

கேரள மாநிலத்தில் கண்ணூர் நகரில் ஒரு தனியார் பள்ளி இயங்கி வருகிறது.. 8 மாதங்களுக்கு முன்பு, இந்த பள்ளிக்கு ஒரு மாணவி 9ம் வகுப்புக்கு புதிதாக வந்து சேர்ந்துள்ளார்.

பள்ளியும், நண்பர்களும், அந்த சூழலும் புதிது என்பதாலும், வெளிமாநிலத்தில் இருந்து கேரளாவுக்கு வந்ததாலும், கிளாஸ்ரூமில் யாருடனும் சரியாக பேசாமல் இருந்துள்ளார்.. ஒருவித தயக்கத்துடனேயே தினமும் பள்ளிக்கு வந்துபோயுள்ளார்..

கிளாஸ்ரூம்

இதை பார்த்த அதே கிளாஸில் படிக்கு ஒரு மாணவன், மாணவியிடம் தானாகவே தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பேசினான்.. நட்பாகவும் பழகி வந்திருக்கிறார்… மேலும், அந்த மாணவன், மாணவியின் வீட்டுக்கும் அடிக்கடி சென்று மிகக் குறுகிய காலத்திலேயே மாணவியின் பெற்றோரிடம் நற்பெயரையும் சம்பாதித்துக் கொண்டான். அப்போதும் அந்த மாணவி கூச்சத்துடன் இருந்துள்ளார்.. ஒரு கட்டத்தில் அந்த மாணவன், போதை பொருளை கொடுத்து ‘இதை சாப்பிடு உன் தயக்கமெல்லாம் பறந்துவிடும், இயல்பாய் பேச ஆரம்பித்துவிடுவாய்.. புத்துணர்ச்சியாய் இருக்கும்”என்று சொல்லி தந்துள்ளார்.

கிளாஸ்மேட்

மாணவியும் அதை வாங்கி சாப்பிட ஆரம்பித்துள்ளார்.. தினமும் அந்த போதை பொருளை மாணவன் மாணவிக்கு தந்து வந்துள்ளான்.. நாளடைவில் போதைப்பொருளுக்கு மாணவி அடிமையாகி விட்டார்.. போதைப் பொருள் இல்லாமல் அவரால் தூங்க கூட முடியாத நிலைமை ஏற்பட்டது.. எனவே, போதைப்பொருள் வேண்டும் என்று மாணவனிடம், அந்த மாணவி கேட்டுள்ளார்.. அதற்கு மாணவன், “நான் சொல்றபடியெல்லாம் கேட்டால்தான், போதைப்பொருளை தருவேன் என சொல்லி இருக்கிறார்.. இதற்கு மாணவியும் சரி என்று சொல்ல, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான் அந்த மாணவன்..

திட்டவட்டம்

அதை வீடியோவாகவும் எடுத்து வைத்துக்கொண்டான்.. தொடர்ந்து வீடியோவை காட்டியே பலமுறை பாலியல் தொந்தரவு செய்துவந்துள்ளான். இந்நிலையில், மாணவியின் வீட்டில் அவரது பெற்றோர், செல்போனை தற்செயலாக பார்த்துள்ளனர்.. அப்போது அதில் இருந்த காட்சியை கண்டு அதிர்ந்தனர்.. மாணவி போதைப்பொருள் பயன்படுத்தும்போது, அதை வீடியோ, போட்டோவாக எடுத்து வைத்துள்ளார்.. இதனால் பதறி போன பெற்றோர், மாணவியை கண்டித்தனர்.. ஆனால், தன்னால் போதை பழக்கத்திலிருந்து வெளியே விட வெளியே வர முடியாது என்று மாணவி திடமாய் பெற்றோரிடம் சொல்லிவிட்டார்.

ட்ரீட்மென்ட்

இதனால் பெற்றோர், வயநாட்டில் உள்ள போதைப்பொருள் மீட்பு மையத்தில் மகளை கொண்டு போய் சேர்த்தனர்.. அங்கு 2 வாரம் மாணவிக்கு சிகிச்சை தரப்பட்டது.. இப்போது உடல்நலம் ஓரளவு அந்த பெண்ணுக்கு தேறியுள்ளது.. பிறகு, போதைப்பொருளை வழங்கியவர்கள், அதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் போலீசில் புகார் தந்தனர்.. இந்த புகாரின்பேரில் போலீசாரும் வழக்கு பதிந்து விசாரணையை மேற்கொண்டனர்..

வாக்குமூலம்

அப்போதுதான் சம்பந்தப்பட்ட மாணவன் சிக்கினான்.. அவனிடம் விசாரணை நடத்தியதில், இதுவரை 20-க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அத்தனை பேரும் போதை மருந்துக்காக தன்னிடம் வந்து விழுந்தனர் என்றும் மாணவன் வாக்குமூலம் தந்தான்.. இதைக்கேட்டு போலீசாரே மிரண்டு போனார்கள்.. இப்போது மாணவனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.. போலீசார் அவனை சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அங்கு அவனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

டிஸ்மிஸ்

பள்ளி நிர்வாகம் அவனை உடனடியாக டிஸ்மிஸ் செய்துள்ளது. அந்த மாணவனுக்கு போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளதால் இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 14 வயது மட்டுமே ஆன மாணவன், இத்தனை பெண்களையும் தன் வலையில் விழவைத்து பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜாலி

மாணவன், பலாத்காரம் செய்த 20க்கும் அதிகமானவர்களில் பெரும்பாலும் மாணவிகள்தானாம்.. ஆனால், அனைத்து பெண்களுமே இந்த மாணவனை விட வயதில் பெரியவர்கள் என்று கூறப்படுகிறது. அனைவருக்குமே ஒரே மாதிரியான போதைப்பொருளை, இதே மாணவன்தான் தந்துள்ளான்.. இதை சாப்பிட்டால் கவலையே இருக்காது, எல்லாமே மறந்துவிடும், ஜாலியாக உணர்வீர்கள் என்று சொல்லி அவர்களை தன் வலையில் விழ வைத்தானாம்..

கண்ணூர்

மேலும், சமீபகாலமாகவே, வெளிநாடுகளில் இருந்தும், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் கஞ்சா, கொகைன், எம்டிஎம்ஏ உள்பட போதைப் பொருட்கள் கேரளாவுக்கு பெருமளவு கடத்தப்பட்டு வருவதால், சிறுவனுக்கு எங்கிருந்து இந்த போதை கிடைத்திருக்கும் என்ற விசாரணையும் நடக்கிறது.. சிறுவன் படிக்கும் இந்த பள்ளி, கண்ணுர் நகரத்தில் மையத்திலேயே உள்ளதாக கூறப்படுகிறது.. இந்த சுற்றுவட்டார பகுதியிலும் போதைப்பொருள் நடமாட்டம் இருப்பதாக ஏற்கனவே போலீசாருக்கு தகவல் வந்து, கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுள்ளனராம்.. அப்படி இருந்தும், போதைப்பொருட்கள் நுழைந்துள்ளது, கண்ணூர் போலீசாருக்கு அதிர்ச்சியை தந்து வருவதாக கூறப்படுகிறது.

Share on facebook
Facebook
Share on google
Google+
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on whatsapp
WhatsApp