Phone/WhatsApp : +91 72000 33317

Reg.No. TN-02-0040998

மனநலம் பாதிக்கப்பட்டவர் வெறிச்செயல்…பேருந்துக்காக காத்திருந்தவர் குத்திக்கொலை: ஊட்டியில் ஷாக்..!!

ooty

நீலகிரி: ஊட்டி அருகே பேருந்து நிலையத்தில் நின்ற தொழிலாளியை மனநலம் பாதிக்கப்பட்ட நபர் குத்திக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் ஊட்டி மஞ்சனக்கொரை பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி ஹரி. இவர் ஊட்டி லோயர் பஜார் சாலை உள்ள பேருந்து நிலையத்தில பேருந்துக்காக காத்திருந்தார்.

அப்போது 38 வயதான கார்த்திக் என்பவரும் அங்கு வந்தார். சிறிது நேரம் அங்கு காத்திருந்த பின்னர் பேருந்து நிலையத்தில் அமர்ந்து இருந்த ஹரியை தன் மறைத்து வத்திருந்த கத்தியால் காரத்திக் குத்தினார். இதனை கண்ட சகபயணிகள் பயத்தில் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

பின்னர் ரத்த வெள்ளத்தில் துடித்த ஹரியை மீட்டு ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். ஊட்டியில் பட்டப்பகலில் பேருந்து நிறுத்தத்தில் நடந்த கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பின்னர் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், தொழிலாளியை கத்தியால் குத்திய கார்த்திக் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது.

Share on facebook
Facebook
Share on google
Google+
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on whatsapp
WhatsApp