
இந்நிலையில், ஆகஸ்ட் 4 அல்லது 5-ம் தேதி (இன்று) 3-ம் உலகப் போர் தொடங்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியா கடந்த வாரம் ஈரானில் படுகொலை செய்யப்பட்டார். இதற்கு இஸ்ரேல்தான் காரணம் என்றும் பழிவாங்குவோம் என்றும் ஈரான் எச்சரித்துள்ள நிலையில்தான் குஷால் குமார் இவ்வாறு கணித்துள்ளார்.
அதேநேரம், இதற்கு முன்பு 3-ம் உலகப் போர் தொடங்கும் என இவர் பல முறை கணித்திருந்த போதும் அது நடக்கவில்லை. கடந்த ஜூன் 18-ம் தேதி மூன்றாம் உலகப் போர் தொடங்கும் என கணித்தார். ஆனால் போர் தொடங்கவில்லை. பின்னர் ஜூலை 26 அல்லது 28-ம் தேதி போர் தொடங்கும் என்றார். அதுவும் பொய்த்துப் போனது. இப்போதைய கணிப்பாவது பலிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.