Phone/WhatsApp : +91 72000 33317

Reg.No. TN-02-0040998

வலிமை முதல் 3 நாளில் இப்படி ஒரு வசுலா?….

Valimai-updatenews360-2-2-1

நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் 2-வது படம் வலிமை. இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார். அதிரடி ஆக்‌ஷன் திரைப்படமான வலிமை, கடந்த 24ம் தேதி வெளியாகியது. இதில் அஜித் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஹீரோயினாக காலா பட நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார்.

மேலும் யோகிபாபு, குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் வில்லன் கேரக்டரில் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடித்துள்ளார். கொரோனா தொற்றுக்கு பிறகு, திரையரங்கில் வெளியான மிகப்பெரிய படம் வலிமையாகும். இதனால், ரசிகர்கள் மட்டுமல்லாமல், திரையரங்கு உரிமையாளர்களும் மிகுந்த உற்சாகத்துடன் வலிமை படத்தை வரவேற்றுள்ளனர்.

உலகம் முழுவதும் வெளியான இப்படத்திற்கு முதல் நாளிலிருந்தே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. திரையரங்குகளில் மக்களின் கூட்டம் அலைமோதி வருகிறது. அஜித் ரசிகர்களிடையே Positive ரெஸ்பான்ஸ் இருந்தாலும், படத்தின் நேரமும், பைக் காட்சிகளும் படத்திற்கு நெகட்டிவ்வாக அமைந்துள்ளது என்ற கருத்தும் எழுந்து வருகிறது.

மேலும், ஆக்சன் காட்சிகள் அற்புதமாக இருந்தாலும், சென்டிமென்ட் காட்சிகள் வலியப் புகுத்தப்பட்டதாக இருந்ததென விமர்சனங்கள் எழுந்தன. இப்படி நெகட்டிவ் கமெண்ட்ஸ்கள் ஒருபுறம் வந்து கொண்டே இருந்தாலும், வலிமை வசூலில் அசுர சாதனையை படைத்து வருகிறது. உலகளவில் முதல் 3 நாட்களிலேயே ரூ.100 கோடியை கடந்து சாதனை படைத்தது.

தற்போது, 5வது நாளாக வெற்றி நடை போட்டு வரும் வலிமை, ரூ.150 கோடி வசூலை தொடவிருக்கிறது. இது அஜித் ரசிகர்களிடையே குதூகலத்தை ஏற்படுத்தியுள்ளது. விமர்சனங்களுக்கு மத்தியிலும் வசூலில் வலிமை கம்பீரமாக நடை போடுகிறது என்கின்றனர் சினிமா விமர்சகர்கள்.

Share on facebook
Facebook
Share on google
Google+
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on whatsapp
WhatsApp