Phone/WhatsApp : +91 72000 33317

Reg.No. TN-02-0040998

விஜயின் அடுத்த படத்தில் ஜோடி இவங்களா!!!!…அப்போ செம்ம தான்…

vijay

விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாவதாக படத்தை தயாரித்திருக்கும் சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அந்தப் படத்தின் அரபிக்கு குத்து பாடல் ஏற்கனவே வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

கோலமாவு கோகிலா, டாக்டர் என இரு வெற்றிப்படங்களை தந்த நெல்சன் பீஸ்டை இயக்கி  இருப்பதால் படத்திற்கு எதிர்பார்ப்பு உள்ளது. பீஸ்டில்  பூஜா ஹெக்டே விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.

விஜய்யின் அடுத்தப் படத்தை தெலுங்குப் பட இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்குகிறார். தில் ராஜு படத்தை தயாரிக்கிறார். இவர்தான் ராம் சரணை வைத்து ஷங்கர் இயக்கி வரும் படத்தையும் தயாரித்து வருகிறார்.

தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் தயாராக உள்ள விஜய் படத்தின் ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் தற்போது நடந்து வருகின்றன. விஜய்யை தவிர படத்தில் வேறு யார் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை.

அதே நேரம் தென்னிந்திய மொழிகளில் தற்போது முன்னணியில் இருக்கும் ராஷ்மிகா மந்தனா இந்தப் படத்தில் நாயகியாக நடிக்கலாம் என தகவல் கசிந்துள்ளது. ஆனால் சம்பந்தப்பட்ட படக்குழுவினர் இதனை இன்னும் உறுதி செய்யவில்லை. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

வம்சி பைடிபள்ளி இயக்கும் இந்தப் படம் உணர்ச்சிகரமான கதையை கொண்டது என அவர் தெரிவித்திருந்தார். நீண்ட நாட்களுக்கு பிறகு இதுபோன்ற கதையில் விஜய் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share on facebook
Facebook
Share on google
Google+
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on whatsapp
WhatsApp