Phone/WhatsApp : +91 72000 33317

Reg.No. TN-02-0040998

உக்ரைன் மீதான போர் காரணமாக வாகன உற்பத்தியை நிறுத்தியுள்ள பிரபல நிறுவனங்கள்!

Auto-engineering

உலக நாடுகள் எத்தனை எச்சரிக்கையை விடுத்தாலும் ரஷ்யா அதை கண்டு கொள்வதாக இல்லை. கடந்த மாதம் 24-ஆம் தேதி வியாழக்கிழமை உக்ரைன் மீதான போர் நடவடிக்கையை தொடங்கியது ரஷ்யா. அப்போது முதல் இப்போது வரையில் மிக உக்கிரமான தாக்குதல்களை நடத்தி தொடர்ந்து முன்னேறிச் செல்கிறது ரஷ்ய ராணுவம்.

ரஷ்யாவின் இந்த முயற்சியை முறியடிக்கும் வகையில் பொருளாதார தடைகளை அமெரிக்கா, கனடா உள்ளிட்ட உலக நாடுகள் அறிவித்து வருகின்றன. இதற்கிடையே, போர் குறித்த போலி செய்திகள் உலா வருவதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் குற்றம்சாட்டியுள்ளார். ரஷ்யாவில் ஃபேஸ்புக் பயன்பாட்டை அவர் தடை செய்துள்ளார். டிவிட்டர் பயன்படுத்துவதற்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ராணுவம் குறித்து பொய்யான செய்தியை பரப்புவோருக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற புதிய சட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

உற்பத்தியை நிறுத்திய கார் நிறுவனங்கள்

உலக நாடுகளின் நெருக்கடி ஒருபுறம் இருக்க, ரஷ்யாவில் தொழிற்சாலைகளை அமைத்துள்ள உலகின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்யும் நாடுகளும் கடிவாளத்தை கையில் எடுத்துள்ளன.

டொயோட்டா உற்பத்தி நிறுத்தம்

ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் பகுதியில் டொயோட்டா நிறுவனத்தின் உற்பத்தி ஆலை அமைந்துள்ளது. ரஷ்ய சந்தைக்கு என பிரத்யேகமாக ஆர்ஏவி4 மற்றும் கேம்ரி மாடல்கள் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. இத்தகைய சூழலில், வெள்ளிக்கிழமை தொடங்கி உற்பத்தியை நிறுத்துவதாக டொயோட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

டாய்ம்லெர் டிரக்

ரஷ்யா உடனனான வர்த்தக நடவடிக்கைகளை நிறுத்தி வைப்பதாக டாய்ம்லெர் டிரக் நிறுவனம் அறிவித்துள்ளது. ரஷ்யாவின் லாரி உற்பத்தியாளரான கமாஸ் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வந்த டாய்ம்லெர் நிறுவனம், அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளது.

ஏபி வால்வோ மற்றும் ஃபோர்டு மோட்டார்

ஸ்வீடனைச் சேர்ந்த லாரி உற்பத்தி நிறுவனமான ஏபி வால்வோ, ரஷ்யாவில் உள்ள தொழிற்சாலையில் அனைத்து உற்பத்தியும் நிறுத்தப்படுவதாக தெரிவித்துளது. கால வரையறையின்றி உற்பத்தியை நிறுத்துவதாக ஃபோர்டு மோட்டார் நிறுவனம் கூறியுள்ளது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ரெனால்ட் கார் நிறுவனத்துக்கு, மூலப் பொருட்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுவதன் காரணமாக, ரஷியாவில் கார் அசெம்பிள் செய்யும் பணிகள் நிறுத்தப்படுவதாக தெரிவித்துள்ளது.

ஹூண்டாய் மற்றும் எஸ்கோடா நிறுவன கட்டுப்பாடுகள்

ரஷ்யாவில் ஆண்டுதோறும் 2,30,000 கார்களை தென் கொரியாவின் ஹூண்டாய் நிறுவனம் உற்பத்தி செய்து வரும் நிலையில், மூலப் பொருள் தடுப்பாடு காரணமாக ஒரு வாரத்துக்கு உற்பத்தி நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வோல்ஸ்வேகன் நிறுவனத்தின் எஸ்கோடா நிறுவனம், ரஷ்யாவில் கடந்த இரண்டாவது பெரிய உற்பத்தியாளர் என பெயர் பெற்ற நிறுவனம் ஆகும். மூலப் பொருள் தட்டுப்பாடு காரணமாக உற்பத்தி நிறுத்தப்படுவதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.

பிஎம்டபிள்யூ உள்ளிட்ட சொகுசு கார்கள்

சொகுசு கார் உற்பத்தியாளர்களான பிஎம்டபிள்யூ, ஜாகுவார் லாண்ட் ரோவர், உள்ளிட்ட நிறுவனங்கள் ரஷ்யாவுக்கான ஏற்றுமதியை நிறுத்தி வைத்துள்ளன. அமெரிக்காவின் பிரபல பைக் தயாரிப்பு நிறுவனமான ஹார்லி டேவிட்சன், ரஷ்யாவுக்கு ஏற்றுமதியை நிறுத்தியுள்ளது.

Share on facebook
Facebook
Share on google
Google+
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on whatsapp
WhatsApp