TRUE NEWS LOGO
RNI NO - TNTAM/2022/83480

Phone/WhatsApp : +91 72000 33317

சிறுமி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம்: ஆட்டோ டிரைவருக்கு அதிரடி தீர்ப்பளித்த கோர்ட்…

Pondy-Rape-Case-Jgement-1024x571-1

புதுச்சேரி: புதுச்சேரியில் சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு பத்து ஆண்டுகள் சிறைதண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 4 லட்சம் இழப்பீடு தரவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

புதுச்சேரி அண்ணாசாலை அருகே கடந்த 29.06.2019 அன்று மாலை அங்குள்ள ஆட்டோ ஸ்டாண்டில், ஆட்டோ ஓட்டி வரும் விழுப்புரம் காக்குப்பத்தைச் சேர்ந்த ராஜா என்ற ராஜசேகர் (38) நின்றிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த 13 வயது சிறுமியை வீட்டில் விடுவதாகவும், தமக்கு சிறுமியின் மாமா மிக நொருக்கமானவர் என கூறி வலுக்கட்டாயமாக சிறுமியை அழைத்து சென்று விழுப்புரம் மாவட்டம் காக்குப்பத்தில் உள்ள தனது வீட்டில் 3 நாட்கள் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்து மிரட்டியுள்ளார். 4ம் நாள் காலை மறுபடியும் பாலியல் பலாத்காரம் செய்து பின்பு சிறுமியை புதுச்சேரியில் பேருந்து நிலையம் அருகே இறக்கிவிட்டு வெளியில் சொல்ல கூடாது என மிரட்டி சென்றுள்ளார்.

இதையடுத்து சிறுமியின் பெற்றோர் ஒதியஞ்சாலை போலீசில் புகார் அளித்ததின் பேரில், போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, ஆட்டோ டிரைவர் ராஜாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு கடந்த 2 ஆண்டுகளாக புதுச்சேரி சிறப்பு நீதி மன்றத்தில், தலைமை நீதிபதி செல்வநாதன் முன்பாக விசாரணை நடந்து வந்தது. விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் ராஜா என்ற ராஜசேகருக்கு பத்து ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும், 12 ஆயிரம் ரூபாய் அபராதமும், பாதிக்கப்பட்ட சிருமிக்கு ரூ. 4 லட்சம் இழப்பீடு தரவும் நீதிபதி உத்தரவிட்டார்.

Share on facebook
Facebook
Share on google
Google+
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on whatsapp
WhatsApp