TRUE NEWS LOGO
RNI NO - TNTAM/2022/83480

Phone/WhatsApp : +91 72000 33317

டென்மார்க்லயும் தலைவர் பாடல்தான்… ஏஆர் ரஹ்மான் வெளியிட்ட வீடியோ

ARRahman_RedBlazer_1200

மும்பை : சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த சிவாஜி படத்தின் டைட்டில் பாடல் ரசிகர்களின் மனம் கவரும் வகையில் அமைந்திருந்தது.ஏஆர் ரஹ்மான் இசையில் வெளிவந்த இந்த பாடல் தற்போது டென்மார்க் வரை ஒலித்து வருகிறது.டென்மார்க்கில் ஒலித்த இந்த பாடலின் வீடியோவை ஏஆர் ரஹ்மான் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

சூப்பர்ஹிட் பாடல்கள்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கியிருந்த படம் சிவாஜி. கடந்த 2007ல் வெளிவந்த இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார் ஏஆர் ரஹ்மான். அவரது இசையில் படத்தின் அனைத்து பாடல்களும் சூப்பர்ஹிட்டாகின. குறிப்பாக படத்தின் டைட்டில் பாடல் பல்லேலக்கா மிகவும் சிறப்பான வரவேற்பை பெற்றது.

எஸ்பிபி வாய்ஸ் அனைத்து தரப்பினரும் விரும்பும் வகையில் இந்த பாடல் அமைந்திருந்தது. வெளிநாட்டிலிருந்து வரும் ஒருவர் நமது நாட்டின் சமையல், பெண்கள் உள்ளிட்ட அனைத்தையும் பாராட்டுவது போல இந்த பாடல் அமைந்திருந்தது. எஸ்பிபி தனது குரலால் இந்த பாடலுக்கு உயிரூட்டியிருந்தார்.

Group of fans cheering while watching match in stadium.

பார்வையாளர்கள் ஆரவாரம்

இந்நிலையில் இந்த பாடல் தற்போது டென்மார்க்கில் ஒலித்துள்ளது. டென்மார்க்கின் கோப்பென்ஹாகனில் கோயர் பாடலை பாடிய குழுவினர் இந்த பாடலை ஆக்ஷனுடன் பாடியுள்ளனர். சாலையில் பாடப்பட்ட இந்த பாடலை கண்ட பார்வையாளர்கள் ஆரவாரத்துடன் கேட்டும் வீடியோ எடுத்தும் மகிழ்ந்தனர்.

குவிந்த பாராட்டுகள்

இந்நிலையில் இந்த நிகழ்வின் வீடியோவை இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அவரது மகன் அமீனும் கமெண்ட் செக்ஷனில் தனது உற்சாகத்தை பதிவு செய்துள்ளார். இதுபோன்று மற்றவர்களும் நெருப்பு மற்றும் உற்சாக எமோஜிகளுடன் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Share on facebook
Facebook
Share on google
Google+
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on whatsapp
WhatsApp