TRUE NEWS LOGO
RNI NO - TNTAM/2022/83480

Phone/WhatsApp : +91 72000 33317

நான் போற்றும் இயக்குநர்களில் ஒருவர்.. அவரது படத்தில் நடிக்க ஆர்வமாய் இருக்கிறேன்.. தனுஷ் பளீச்!

actor-danush-2

சென்னை: தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா படத்தில் நடிப்பதை நடிகர் தனுஷ் உறுதி செய்துள்ளார்.

தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் சேகர் கம்முலா. தெலுங்கில் டாலர் ட்ரீம்ஸ், ஃபிடா, லீடர் உள்ளிட்ட வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார்.

தனது முதல் படமான டாலர் ட்ரீம்ஸ் படத்திற்காக சிறந்த அறிமுக இயக்குநருக்கான தேசிய விருதை பெற்றார். தற்போது சேகர் கம்முலா தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் ஒரு இயக்கவுள்ளார். பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக தயாராகும் அப்படத்தை நாராயணதாஸ் நரங் மற்றும் புஷ்கர் ராம்மோகன் ராவ் ஆகியோர் தயாரிக்கின்றனர். இப்படத்தில் தனுஷ் நாயகனாக ஒப்பந்தமாகியுள்ளதாக படக்குழு அண்மையில் அதிகாரப்பூர்வமாய் அறிவித்தது.

இந்நிலையில் நடிகர் தனுஷ் இப்படம் குறித்து டிவிட்டி தான் நடிப்பதை உறுதி செய்துள்ளார். இதுதொடர்பான அவரது பதிவில், நான் போற்றும் இயக்குநர்களில் ஒருவரான சேகர் கம்முலா சாருடன் பணியாற்ற உண்மையிலேயே ஆர்வமாக இருக்கிறேன். மேலும் நாராயணதாஸ் நரங் மற்றும் புஷ்கர் ராம்மோகன் ராவ் ஆகியோருடன் ட்ரில்லிங்குவல் பேனரில் கைகோர்ப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இதை எதிர்நோக்கியிருக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

Share on facebook
Facebook
Share on google
Google+
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on whatsapp
WhatsApp