திருவள்ளூர் : செங்குன்றம் அருகே காதல் விவகாரத்தில் தலையிட்ட பள்ளி மாணவர்களை ஆட்டோவில் கடத்திய மூன்று பேர் கைது செய்தனர்
செங்குன்றம் அடுத்த கண்ணம்பாளையம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ஐயப்பனுடைய மகன் ராகுல் (17) செங்குன்றம் அடுத்த வடகரை அரசு ஆதிதிராவிடர் நலத்துறை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவரும் இவருடைய நண்பர் பிரசாந்த் (18) ஆகியோர் செங்குன்றம் திருவள்ளூர் கூட்டு சாலை எம்ஜிஆர் சிலை அருகே நேற்று மாலை பேசிக் கொண்டிருந்தபோது, ஒரு ஆட்டோவில் வந்த ஒரு கும்பல் இருவரையும் கடத்தி சென்று கொண்டிருந்தனர். அப்போது ஆட்டோவில் இருந்து பிரசாந்த் தப்பி இறங்கிவந்து அங்கிருந்த போலீசார் தகவல் கொடுத்தனர்.

தகவலின் பேரில் செங்குன்றம் போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை செய்து செங்குன்றம் அருகே உள்ள பாடியநல்லூர் செல்லும்போது ஆட்டோவை வழிமறித்து பிடித்து தீவிர விசாரணை செய்தனர். அதில் புழல் லட்சமிஅம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கிஷோர் (21), செங்குன்றம் தேவகி தெருவைச் சார்ந்த சச்சின் தீபக் (26) எம் ஏ நகரைச் சேர்ந்த சரண் (24) என தெரியவந்தது.
இவர்களைக் கைதுசெய்து ஆட்டோவையும் பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தியதில், கிஷோர் என்பவன் காதல் விவகாரத்தில் பாலியல் புகாரில் சிக்கிய வழக்கில் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறை சென்றுள்ளார்.
இந்நிலையில் கடத்தப்பட்ட பள்ளி மாணவன் ராகுல் கிஷோரின் காதல் விவகாரத்தில் தலையிட்டதால் அவரை நண்பருடன் சேர்ந்து கடத்தியது விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
