Phone/WhatsApp : +91 72000 33317

Reg.No. TN-02-0040998

ரூ.2,574 கோடி! கடன் சுமையில் சென்னை மாநகராட்சி தத்தளிப்பு : வட்டியும் கூடி நிதி பற்றாக்குறை அதிகரிப்…

download (16)

சென்னை மாநகராட்சி 2,573.54 கோடி ரூபாய் கடனில் தத்தளித்து வரும் நிலையில், நிதி பற்றாக்குறை மேலும் அதிகரித்துள்ளது. இத்துடன், ஒப்பந்ததாரர்களுக்கு 140 கோடி ரூபாய், அரசு துறைகளுக்கு 728 கோடி ரூபாய் பாக்கிவைக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் சொத்து வரி, தொழில் வரி உள்ளிட்ட பல்வேறு வகையில் ஆண்டுக்கு 7,686 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது.

இந்த வருவாயில், 1,939.98 கோடி ரூபாய், பணியாளர் சம்பளம் மற்றும் ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. மேலும், 11 மண்டலங்களில் குப்பை கையாளும் பணிகளுக்காக தனியார் நிறுவனங்களுக்கு 53 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது.
மீதமுள்ள தொகை மற்றும் மத்திய, மாநில அரசுகளின் மானிய நிதி, உலக வங்கி உள்ளிட்ட பல்வேறு நிதி ஆதாரங்கள்வாயிலாக, மாநகராட்சியின் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுகின்றன….
குறிப்பாக, சாலை சீரமைத்தல், மழை நீர் வடிகால், தெரு விளக்கு, கொசு ஒழிப்பு, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், உலக வங்கி, ஜெர்மன் வளர்ச்சி வங்கி உள்ளிட்ட பல்வேறு வகையில் சென்னை மாநகராட்சி வாங்கியுள்ள கடன் 2,573.54 கோடி ரூபாயாக உள்ளது. அதற்கான வட்டி 148.82 கோடி ரூபாய் செலுத்த வேண்டியுள்ளது.
அத்துடன், சென்னை மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததாரர்களுக்கு 140 கோடி ரூபாய் வழங்காமல் நிலுவை வைத்துள்ளது.

மேலும், பயன்பாட்டிற்கான கட்டணமாக குடிநீர் வாரியம், மின் வாரியம் உள்ளிட்ட அரசு துறைகளுக்கு 728 கோடி ரூபாய் செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ளது. இதன் வாயிலாக 3,441 கோடி ரூபாய் நிதி பற்றாக்குறையால், மாநகராட்சி தத்தளித்து வருகிறது.

சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மாநகராட்சி பட்ஜெட்டில், 334 கோடி ரூபாய் நிதி பற்றாக்குறை இருந்தது. தற்போது, கடன் சுமையும் அதிகரித்துள்ளதால், நிலுவை வைத்துள்ள சொத்து வரியை வசூலிக்க, மாநகராட்சி தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

இது குறித்து, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: கடந்த 2021ம் ஆண்டில், சென்னை மாநகராட்சியின் கடன் 2,715.17 கோடி ரூபாயாக இருந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளில் 141.63 கோடி ரூபாய் கடனை அடைத்துள்ளோம்.
அதேநேரம், சென்னையில் வசிக்கும் ஒரு கோடி மக்களுக்கான பல்வேறு வளர்ச்சி பணிகள்,…

நோய் தடுப்பு மற்றும் வெள்ள தடுப்பு பணிகளையும் மேற்கொண்டு வருகிறோம். தற்போது, சொத்து வரி வசூலிப்பில்ற்றும் வெள்ள தடுப்பு பணிகளையும் மேற்கொண்டு வருகிறோம். தற்போது, சொத்து வரி வசூலிப்பில் தீவிரம் செலுத்தி வருகிறோம்.

சொத்து வரி போன்ற பல்வேறு வருவாய் வாயிலாக மாநகராட்சியின் நிதி பற்றாக்குறை மற்றும் கடன் சுமை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.
கடந்த மூன்று நிதியாண்டு கடன் விபரம்
நிதியாண்டு கடன் (ரூ.) ஒப்பந்ததாரர்கள் நிலுவை (ரூ.) அரசு துறைகளுக்கு நிலுவை (ரூ.).

2021 – 22 2,715.17 கோடி 218.57 கோடி 511.97 கோடி.
2022 – 23 2,591.83 கோடி 279.43 கோடி 373.51 கோடி
2023 – 24 2,573.54 கோடி 140 கோடி 728 கோடி.

Share on facebook
Facebook
Share on google
Google+
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on whatsapp
WhatsApp