TRUE NEWS LOGO
RNI NO - TNTAM/2022/83480

Phone/WhatsApp : +91 72000 33317

2 இல்லை 3 .. பதற வைத்த பாண்டியன்.. கலைவாணியை கட்டிப்போட்டு.. மார்பு உட்பட 16 இடங்களில் சூடு

screenshot9470-1624945254

சென்னை: கலைவாணியின் கை,கால்களை கட்டி போட்டு, மார்பு மற்றும் அந்தரங்க பகுதிகளில் சூடு வைத்த கொடுமைக்கார கணவன் குறித்து போலீசில் புகார் தரப்பட்டுள்ளது.

பெண்ணாகரம் அருகே எம்.தண்டா என்ற கிராமம் உள்ளது.. இங்கு வசித்து வருபவர் பாண்டியன்.. இவரது மனைவி கலைவாணி.. இவர்களுக்கு கல்யாணம் ஆகி 7 வருஷம் ஆகிறது. 5 வயதில் ஒரு மகளும், 3 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

பாண்டியனுக்கு ஏற்கனவே ஒரு கல்யாணம் ஆகிவிட்டதாம்.. இந்த விஷயம் கலைவாணிக்கு லேட்டாகத்தான் தெரியவந்துள்ளது.. இதை பற்றி கேட்டதுதான் பிரச்சனை ஆரம்பமாகி உள்ளது.. தினமும் இது தொடர்பான சண்டை தம்பதிக்குள் வந்து போயுள்ளது.

கல்யாணம்

இதனால், ஒருகட்டத்தில் வீட்டுக்கு வருவதையே தவிர்த்தாராம் பாண்டியன்.. ஒருவேளை முதல் மனைவியுடன் சேர்ந்து மறுபடியும் குடித்தனம் செய்கிறோரோ என்ற சந்தேகம் எழுந்தது.. ஆனால், பாண்டியன் 3வதாக ஒரு பெண்ணை கல்யாணம் செய்து கொண்டு, அவருடன் புதுவாழ்க்கையை நடத்தி வந்தது தெரியவந்துள்து.

பாண்டியன்

3வதாக வந்த இந்த புதுப்பெண், கலைவாணி எங்கே தன் கணவனை பிரித்துவிடுவாரோ என்று பயந்து, அவரை பற்றி இல்லாததையும் பொல்லாததையும் பாண்டியனிடம் போட்டு தந்துள்ளார்.. கலைவாணிக்கு பல ஆண்களுடன் தொடர்பு இருப்பதாகவும் பாண்டியனிடம் சொல்லி உள்ளார். இவரது பேச்சை நம்பி, கலைவாணியை அடித்து துன்புறுத்தி உள்ளார் பாண்டியன்..

அந்தரங்க பகுதி

15 நாட்களுக்கு முன்பு, கலைவாணிக்கு கூல்டிரிங்ஸில் மயக்க மருந்து கலந்து, வலுக்கட்டாயமாக குடிக்க வைத்துள்ளார்.. இதை குடித்து மயங்கி விழுந்த கலைவாணியின் கை, கால், மார்பு, மற்றும் அந்தரங்க பகுதி என உடல் முழுவதும் சூடு வைத்துள்ளார்.. மொத்தம் 16 இடங்களில் இரும்பு கம்பியை காய்ச்சி சூடு வைத்திருக்கிறார்.

அலறல்

கலைவாணி அலறி சத்தம் போட்டு ஊரை கூப்பிட்டுவிடக் கூடாது என்பதற்காக, அவரது கைகால்களை கட்டி வைத்துள்ளார்.. வாயில் ஒரு பெரிய துணியை நுழைத்து அடைத்துவிட்டார்.. கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் சூடு வைக்கும் சம்பவம் நடந்துள்ளது.. அதற்கு பிறகு கால், கால் கட்டை அவிழ்த்துவிட்டு, இதை பற்றி வெளியே சொன்னால், குழந்தைகளையும் சேர்த்து கொலை செய்துவிடுவதாகவும், மிரட்டி உள்ளார்..

புகார்

பிறகு சமயம் பார்த்து, அங்கிருந்து தப்பித்து அம்மா வீட்டுக்கு சென்றுள்ளார் கலைவாணி.. அவர்களிடம் கதறி அழுது நடந்ததையெல்லாம் சொல்லவும், பதறி போன பெற்றோர் உடனடியாக கலைவாணியை பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.. போலீசுக்கும் புகாரை சொன்னார்கள்.. இதற்கு ஆதாரமாக உடம்பெல்லாம் சூடு வைத்ததை போட்டோ எடுத்தும் தந்துள்ளனர். ஆனால், போலீசார் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லையாம்..

நடவடிக்கை

இதற்கு பிறகு, தர்மபுரி எஸ்பியை நேரில் சந்தித்து கலைவாணியின் பெற்றோர் புகார் தந்தனர்… இதையடுத்தே விசாரணை ஆரம்பமாகி உள்ளது. பாண்டியனை கைது செய்து விசாரிக்கும் நடவடிக்கையும் துவங்கி உள்ளதாம்.. அதேசமயம், பாண்டியனின் 3வது மனைவியையும் சும்மா விடக்கூடாது, அவர்மீதும் நடவடிக்கை தேவை என்ற கோரிக்கைகளை அந்த பகுதி மக்கள் விடுத்து வருகின்றனர்.

Share on facebook
Facebook
Share on google
Google+
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on whatsapp
WhatsApp