நடிகை, பின்னணி பாடகி, இசையமைப்பாளர் என பன்முகத் தன்மை கொண்டவர் நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். கமல் நடித்த ஹே ராம் படத்தில் சிறிய ரோலில் நடித்த ஸ்ருதிஹாசன், அதற்கு பிறகு வந்த பல பட வாய்ப்புக்களை நிராகரித்தார். பிறகு லக் என்ற இந்தி படத்தின் மூலம் ஹீரோயின் ஆனார்.
ஸ்ருதி ஹாசன் முதன் முதலில் என்றென்றும் புன்னகை என்ற படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடிப்பதாக இருந்தது. ஆனால் அந்த படம் துவங்குவதற்கு முன்பே, கைவிடப்பட்டது. இதனால் பாலிவுட்டில் ஸ்ருதி ஹீரோயின் ஆனார்.
தமிழில் தனுஷ் நடித்த 3 படத்தின் மூலம் ஹீரோயின் ஆன ஸ்ருதிஹாசன், ஏழாம் அறிவு, சிங்கம் 2, பூஜை, வேதாளம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் ராம் சரண், மகேஷ் பாபு என முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார்.
தற்போது விஜய் சேதுபதியுடன் இவர் நடித்த லாபம் படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. சமீபத்தில் தெலுங்கில் பவன் கல்யாணுடன் ஸ்ருதி நடித்த வக்கீல் சாப் படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.