போபால்: பாஜக எம்பி பிரக்யா தாக்கூர் வீட்டிலேயே வேக்சின் போட்டுக்கொண்ட சம்பவம் பெரிய விமர்சனங்களை சந்தித்துள்ளது.பாஜக எம்பி பிரக்யா தாக்கூருக்கு சர்ச்சைகள் ஒன்றும் புதிது இல்லை. பெயிலில் வெளியே வந்து எம்பியான இவர் ஜெயிலில் இருந்து வெளியே வந்த முதல் நாளில் இருந்தே பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறார்.
உடல் நலமில்லை என்று கூறி பெயிலில் வெளியே வந்த பிரக்யா தாக்கூர் பாஜகவில் இணைந்து மத்திய பிரதேசத்தில் போபால் தொகுதியில் லோக்சபா தேர்தலில் வென்று எம்பி ஆனார். இந்த நிலையில் மலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் கோர்ட் முன் ஆஜராக தொடர்ந்து பிரக்யா மறுத்து வருகிறார்.

வீல் சேர்
பொது இடங்களுக்கு வீல்சேரில் செல்லும் இவர், தனக்கு உடல்நிலை சரியில்லை. தன்னால் நடக்க முடியாது என்று கூறி வருகிறார். போலீஸ் கஸ்டடியில் எனக்கு இழைக்கப்பட்ட கொடூரத்தால் உடலில் காயங்கள் ஏற்பட்டன என்றும் கூறி வருகிறார்கள். ஆனால் கால் சரியில்லை என்று கூறிய பிரக்யா கடந்த சில நாட்களுக்கு முன் திருமண விழா ஒன்றில் டான்ஸ் ஆடிய சம்பவம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
हमारी भोपाल की सांसद बहन प्रज्ञा ठाकुर को जब भी बास्केट बॉल खेलते हुए , बग़ैर सहारे के चलते हुए या इस तरह ख़ुशी से झूमते हुए देखते है तो बड़ी ख़ुशी होती है…? pic.twitter.com/MR01Gumnun
— Narendra Saluja (@NarendraSaluja) July 7, 2021
ஆட்டம்
திருமண விழா ஒன்றில் இந்தி பாடலுக்கு டான்ஸ் ஆடிய வீடியோ வெளியாகி உள்ளது. காலில் காயம் என்று கூறிவிட்டு இவர் இப்படி டான்ஸ் ஆடிய சம்பவம் பெரிய சர்ச்சையானது. அதேபோல் சில நாட்களுக்கு முன் கடந்த சில நாட்களுக்கு முன் போபாலில் இவர் கூடைப்பந்து விளையாடிய வீடியோவும் வைரலானது குறிப்பிடத்தக்கது.

வேக்சின்
இந்த நிலையில் திருமண விழாக்களில் ஜாலியாக நடனம் ஆடும் அளவிற்கு ஆரோக்கியத்துடன் இருக்கும் பிரக்யா தாக்கூர் வீட்டிலேயே வேக்சின் போட்டுக்கொண்ட சம்பவம் பெரிய விமர்சனங்களை சந்தித்துள்ளது. இவர் வயது முதிர்ந்தவர், உடல்நிலை சரியில்லாதவர் என்ற காரணத்தால் வீட்டிலேயே வேக்சின் போட்டுள்ளனர். அவருக்கு அளிக்கப்பட்ட முதல் டோஸ் வேக்சின் இது என்பது குறிப்பிடத்தக்கது.

விமர்சனம்
பிரக்யா தாக்கூருக்கு இப்படி வீட்டிற்கே சென்று வேக்சின் போட்டது பெரிய விமர்சனங்களை சந்தித்துள்ளது. இவருக்கு மட்டும் ஏன் இந்த சலுகை கொடுக்கப்பட்டது. டான்ஸ் ஆடும் அளவிற்கு இவர் ஆரோக்கியமாக இருக்கிறார். அப்படி இருக்கும் போது அவருக்கு எப்படி சிறப்பு சலுகை அளிக்கலாம் என்று விமர்சனம் வைக்கப்பட்டுள்ளது.

பிரக்யா
மலேகான் குண்டுவெடிப்பில் வழக்கில் கைதான பிரக்யா தாக்கூர் தற்போது வெளியே பெயிலில் வந்துள்ளார். செப்டம்பர் 29, 2008ல் மும்பையில் இருந்து 270 கிமீ தொலைவில் இருக்கும் மலேகான் பகுதியில் இரண்டு பைக்குகளில் வைக்கப்பட்டு இருந்த வெடிகுண்டு வெடித்தது. இந்த மோசமான சம்பவத்தில் 7 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.