அம்மா உணவகங்கள் போல் அம்மா கிளினிக்குகளும் தொடர்ந்து செயல்படும் என சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.ஜெயலலிதா ஆட்சியில் அம்மா உணவகங்களை அவர் கொண்டு வந்ததன் மூலம் ஏழை எளிய மக்களின் பசியாற்றிய பெருமை அவருக்கு உண்டு. பொதுமக்களால் வரவேற்கப்பட்ட இந்த திட்டத்தை வெளி மாநிலங்களும் பின்பற்றும் அளவுக்கு பிரபலமானவை.பொதுவாக ஒரு ஆட்சியில் கொண்டு வரப்படும் திட்டம் அடுத்த ஆட்சி வரும் போது காணாமல் போய்விடும். அது போல் திமுக தேர்தல் அறிக்கையில் கலைஞர் உணவகம் கொண்டு வரப்படும் என அறிவித்ததால் அதிமுக அரசு கொண்டு வந்த அம்மா உணவகத்தை திமுக அரசு இழுத்து மூடிவிடும் என எதிர்பார்க்கப்பட்டதுஆனால் அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதன் மூலம் அரசியல் காழ்ப்புணர்ச்சியை விட மக்கள் நலன்தான் முக்கியம் என்பதை நிரூபித்துவிட்டார் இந்த கிளினிக்குகள் கிராமப்புற மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. எனவே இவை தொடரும் என சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கொரோனா காலம் முடிந்த பிறகும் அம்மா கிளீனிக்குகள் தொடர்ந்து செயல்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.