TRUE NEWS LOGO
RNI NO - TNTAM/2022/83480

Phone/WhatsApp : +91 72000 33317

அரசியலில் ஈடுபடமாட்டேன்.. மக்கள் மன்றமும் கலைப்பு.. ரஜினிகாந்த் அதிரடி அறிக்கை

rajini24-1606998671-1608462907-1625987610

சென்னை: அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை என்றும் மக்கள் மன்றத்தை கலைத்துவிட்டு ரசிகர் மன்றமாக செயல்படும் என்றும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.நடிகர் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக கடந்த மாதம் அமெரிக்கா சென்றிருந்தார். அங்கு சென்று சிகிச்சை பெற்ற பின்னர் சில நாட்கள் ஓய்வெடுத்துவிட்டு கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை சென்னை வந்தார்.

ரஜினி

இந்த நிலையில் ராகவேந்திரா மண்டபத்திற்கு வந்த ரஜினி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் அரசியலுக்கு வருவதா வேண்டாமா என்பது குறித்து மக்கள் மன்றத்தின் செயல்பாடுகள் குறித்தும் விவாதிக்கவுள்ளதாக செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

அறிக்கை

ஆலோசனைக்கு பிறகு ரஜினிகாந்த் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கும் உறுப்பினர்களுக்கும் என்னை வாழ வைத்த தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கும் வணக்கம். நான் அரசியலுக்கு வர முடியவில்லை என்று சொன்ன பிறகு ரஜினி மக்கள் மன்றத்தின் பணி என்ன, நிலை என்ன என்று மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கேள்விக்குறியாக இருக்கிறது. அதை விளக்க வேண்டியது என்னுடைய கடமை.

எண்ணம் இல்லை

நான் அரசியல் கட்சி ஆரம்பித்து அரசியலில் ஈடுபட ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் பல பதவிகளையும் பல சார்பு அணிகளையும் உருவாக்கினோம். கால சூழலால் நாம் நினைத்தது சாத்தியப்படவில்லை.

ரசிகர் மன்றம்

வருங்காலத்தில் அரசியலில் ஈடுபட போகும் எண்ணம் எனக்கில்லை. ஆகையால் ரஜினி மக்கள் மன்றத்தை கலைத்துவிட்டு சார்பு அணிகள் எதுவுமின்றி இப்போதைக்கு ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ள செயலாளர்கள், இணை, துணை செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுடன் மக்கள் நலப்பணிக்காக முன்பு போல ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றமாக செயல்படும் என அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share on facebook
Facebook
Share on google
Google+
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on whatsapp
WhatsApp