TRUE NEWS LOGO
RNI NO - TNTAM/2022/83480

Phone/WhatsApp : +91 72000 33317

கல்குவாரியில் பாறை வெடிப்பின் போது: பாறை உருண்டு 10 பேர் பரிதாப பலி…..

01

பெங்களூரு: கர்நாடகாவில் கல்குவாரியில் பாறைகளை வெடிவைத்து தகர்த்த போது, பாறைகளை உருண்டு 10 பேர் உயிழிந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கார்நாடகாவிலுள்ள சாம்ராஜ் மாவட்டத்தில் கல்குவாரி பணிகள் நடைபெற்று வருகிறது. கேரளாவை சேர்ந்த ஹகீம் என்பவர் அரசின் அனுமதி பெற்று குத்தகையின் அடிப்படையில் கல்குவாரி நடத்தி வருகிறார். இந்த கல்குவாரியில் தமிழ்நாடு, கேரளா மற்றும் கேரளாவை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட தொழிலார்கள் வேலை செய்து வருகின்றனர்.

கல்குவாரியில் பாறைகள் வெடி வைத்து கற்களாக மாற்றி பொக்லைன் எந்திரகளின் மூலம் லாரிகளில் ஏற்றி பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்நிலையில் நேற்று கல்குவாரியில் வெடி வைத்து பாறைகள் தகர்க்கும் பணி நடைபெற்றது. அப்போது, ஏற்ப்பட்ட திடீர் அதிர்வால்,யாரும் எதிர்பாராத விதமாக குன்றின் மேலிருந்த பெரிய பாறை உருண்டு கீழே சரிந்தது. இதனால் கற்களை உடைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் 10 பேர் பாறையின் அடியில் சிக்கி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது கிறித்து தகவலறிந்து வந்த போலிசார் மற்றும் தீயனைப்பு படையினர் ஈடுபட்டு மேலும் பாறை அடியில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் 6 பேர் பாறையின் அடியில் சிக்கி உயிரிழிந்த நிலையில் 5 பேர் பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த விபத்தில் 10 பேர் உயிரிழிந்திருக்கும் நிலையில் மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் ஆகியோர் இரண்டாவது நாளாக இன்றும் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Share on facebook
Facebook
Share on google
Google+
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on whatsapp
WhatsApp