Phone/WhatsApp : +91 72000 33317

Reg.No. TN-02-0040998

உலகின் மிகப் பெரிய விமானம் “மிரியா”! சல்லி சல்லியாக நொறுக்கிய ரஷ்ய ராணுவம்.. உக்ரைன் மக்கள் வேதனை

ukraine-big-plane

கீவ்: உக்ரைன் நாட்டில் நான்கு நாட்களைக் கடந்தும் போர் தொடரும் நிலையில், அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் ரஷ்ய தாக்குதல்கள் குறித்து சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

உக்ரைன் நாட்டின் மீது கடந்த வியாழக்கிழமை போர் தொடுக்க ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டார். அதன்படி முழு வீச்சில் ராணுவ நடவடிக்கையைத் தொடங்கிய ரஷ்ய ராணுவம் முழு வீச்சில் தாக்கி வருகிறது.

இந்தப் போர் இப்போது முக்கிய நகரங்களைச் சுற்றியும் நடைபெற்று வருகிறது. தலைநகர் கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களின் அருகே ரஷ்ய ராணுவம் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ளது. அதற்கு உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது.

விமானம் அழிப்பு இந்நிலையில் உக்ரைனின் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா ரஷ்ய ராணுவத்தின் தாக்குதல் குறித்து சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். தலைநகர் கீவ் நகர் அருகே உள்ள விமான தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உலகிலேயே மிகப் பெரிய விமானத்தை ரஷ்ய ராணுவம் அழித்துள்ளதாக அவர் குற்றஞ்சாட்டி உள்ளார். இருப்பினும், உக்ரைன் கண்டிப்பாக இந்த விமானத்தை மீண்டும் கட்டியெழுப்பும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மிகப் பெரிய விமானம் உலகிலேயே மிகப் பெரிய விமானமான AN-225 ‘Mriya’ உக்ரைன் ஏரோநாட்டிக்கல் நிறுவனமான அன்டோனோவ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. ‘Mriya’ என்றால் உக்ரைன் மொழியில் ‘கனவு’ என்றே பொருள். இந்த விமானம் கடந்த 1985ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. 30 சக்கரங்கள், 6 இன்ஜின்கள், 290 அடி இறக்கைகளுடன் தயாரிக்கப்பட்ட இது உலகின் மிகப் பெரிய சரக்கு விமானம் என்ற சிறப்பை பெற்றது. சரக்கை ஏற்றுக் கொண்ட இந்த விமானத்தால் 4,500 கிமீ வரை செல்ல முடியும்.

கனவை அழிக்க முடியாது இந்த விமானம் உக்ரைன் தலைநகர் கீவ் நகருக்கு வெளியே உள்ள ஹோஸ்டோமல் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ரஷ்ய ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் இந்த விமானம் முற்றிலும் எரிந்து சாம்பலானதாக அமைச்சர் டிமிட்ரோ குலேபா தெரிவித்துள்ளார். மேலும், “ரஷ்யா எங்கள் மிகப் பெரிய விமானத்தை அழித்தாலும். அவர்களால் வலுவான, சுதந்திரமான மற்றும் ஜனநாயக ஐரோப்பிய நாடு என்ற எங்கள் கனவை அழிக்க முடியாது” என ட்வீட் செய்துள்ளார்.

மீண்டும் உருவாக்குவோம் இது தொடர்பாக உக்ரைன் அரசும் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “உலகின் மிகப்பெரிய விமானமான “மிரியா” (கனவு) ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்களால் கிய்வ் அருகே உள்ள விமான நிலையத்தில் அழிக்கப்பட்டது. நாங்கள் நிச்சயம் அந்த விமானத்தை மீண்டும் உருவாக்குவோம். வலுவான, சுதந்திரமான மற்றும் ஜனநாயக உக்ரைன் என்ற கனவை நிச்சயம் அடைவோம்” என்று பதிவிட்டுள்ளது. மேலும் பகிரப்பட்ட அந்த விமானத்தின் படத்தில், “அவர்கள் மிகப்பெரிய விமானத்தை எரித்தனர், ஆனால் எங்கள் மிரியா ஒருபோதும் அழியாது” என்று தெரிவித்துள்ளனர். மேலும், இதற்கு ட்விட்டரில் பலரும் வேதனை செய்துத்து ட்வீட் செய்து வருகின்றனர்

தற்போதைய நிலை விமானத்தின் தற்போதைய நிலை என்ன என்பதை உறுதிப்படுத்த முடியாது தெரிவித்துள்ள விமானத்தைத் தயாரித்த அன்டோனோவ் நிறுவனம், விமானத்தை ஆய்வு செய்து வருவதாகவும் விரைவில் விமானத்தின் நிலை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. ரஷ்யா தனது தாக்குதலைத் தொடங்கியதில் இருந்தே உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்யக் கடற்படை தனது கப்பலில் இருந்து குண்டு மழை பொழிந்து வருகிறது.

பேச்சுவார்த்தை உக்ரைன் நாட்டில் போர் 4ஆவது நாளை கடந்தும் தொடர்கிறது. தலைநகர் கீவ் உள்ளிட்ட நகரங்களைக் குறிவைத்து உக்ரைன் ராணுவம் தீவிர தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. இந்தச் சூழலில் அண்டை நாடான பெலாரஸ் நாட்டில் வைத்து உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக உள்ளதாக ரஷ்யா அறிவித்தது. முதலில் பெலாரஸ் நாட்டில் வைத்து பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் மறுத்தது. இருப்பினும் கடைசியால் பெலராஸ் நாட்டில் வைத்து இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக் கொண்டுள்ளது.

Share on facebook
Facebook
Share on google
Google+
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on whatsapp
WhatsApp