Phone/WhatsApp : +91 72000 33317

Reg.No. TN-02-0040998

தமிழக அரசு தளபதிக்கு விஜய்க்கு வைத்த புள்ளிவிவர செக்….

thalapathy-vijay-rolls-royce

நடிகர் விஜய் வாங்கிய சொகுசு கார் இறக்குமதி வரி தொடர்பான வழக்கில் அவரது மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமிழ அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் இருந்து கடந்த 2005-ம் ஆண்டு நடிகர் விஜய் வாங்கிய ரூ.63 மதிப்புள்ள சொகுசு காருக்கு நுழைவு வரி செலுத்த வேண்டும் என்று வணிக வரித்துறை உத்தரவிட்டது. இதனை எதிர்த்து விஜய் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பிறகு விஜய் தரப்பில் 7,98,075 ரூபாய் வரி செலுத்தப்பட்டது.ஆனால்,வரி செலுத்தாமால் இருந்த காலகட்டத்தை கணக்கிட்டு ரூபாய் 30,23,609 என்று கடந்த ஆண்டு டிசம்பர் 17ம் தேதி வணிக வரித்துறை உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த கோரிக்கைகளுடன் அடையார் கேட் ஹோட்டல் மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் தாக்கல் செய்த மனுக்களுக்கும் நடிகர் விஜய் தாக்கல் செய்த மனுவோடு நீதிபதி சுரேஷ் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போழுது 2008ம் ஆண்டு விஜயின் சொகுசு கார் இறக்குமதி செய்யப்பட்ட நிலையில்,வரி செலுத்தக்கோரி 2021ம் ஆண்டு நோட்டீஸ் அளித்ததால் அந்த நோட்டீசை ரத்து செய்ய வேண்டும் என்று ஹாரிஸ் ஜெயராஜ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் இதற்கு தமிழக அரசு முன்வைத்த வாதமானது,நுழைவு வரியை செலுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம் 2019ல் உத்தரவு பிறபித்த பிறகும் வரி செலுத்தப்படவில்லை.2005 டிசம்பர் முதல் 2021 செப்டம்பர் வரையிலான 189 மாதங்களுக்குநுழைவு வரியில் 2 சதவீதம் அபராத வட்டியாக ரூபாய் 30,29,609 செலுத்துபடி உத்தரவிட்டுள்ளது.மேலும் சட்டத்தில் அதற்கு அதிகாரம் வழங்கப்பட்டதாகவும் தெறிவிக்கப்பட்டுள்ளது.

காரை வேரொரு நபருக்கு விற்று விட்டதாக விஜய் கூறினாலும்,இறக்குமதி செய்த அவர் தான் நுழைவு வரியை செலுத்த வேண்டும் எனவும்,ஆவணங்களை தாக்கல் செய்ய நோட்டீஸ் கொடுத்து,போதிய அவகாசம் வழங்கியபோது,எவ்வித பதிலும் நடிகர் விஜய் தரப்பில் வராததால் வட்டார போக்குவரத்து அலுவலக ஆவணங்களைப் பெற்று நுழைவி வரியை கணக்கிட்டதாக தெறிவிக்கப்படுகிறது.

மேலும்,நடிகர் விஜய் தொடர்ந்த இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் தெறிவித்துள்ளது.

Share on facebook
Facebook
Share on google
Google+
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on whatsapp
WhatsApp