கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சிறுபாக்கம் பகுதியில் மாமியார் வீட்டுக்கு தீ வைத்த மருமகனை போலீசார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம், வேப்பூர் அடுத்த சிறுபாக்கம் காட்டுகொட்டா பகுதியை சேர்ந்த துரைசாமி மகன் ஜெயவேல் (59), என்பவர் அதே பகுதியை சேர்ந்த அய்யம்பெருமாள் – ஜோதி (79) ஆகியோரின் மகள் வினோத செல்வியை திருமணம் செய்துள்ளார். இதில் அய்யம்பெருமாள் ஏற்கனவே இறந்துவிட ஜோதி மட்டும் தனியாக கூரை வீட்டில் வசித்து வந்தார்.

இந்த நிலையில், தனது மாமியாரிடம் ஜெயவேல், தனக்கு 50 பவுன் நகை தர வேண்டும், புதியதாக பைக் ஒன்றும் வாங்கி தரவேண்டும் என அடிக்கடி மாமியாரிடம், போதையில் வந்து சண்டை போட்டு வந்துள்ளார். ஆனால் மாமியார் நகை பணம் தராததால் நேற்று மதுபோதையில் மாமியார் வசித்து வந்த கூரை வீட்டிற்கு மருமகன் ஜெயவேல் தீவைத்தார்.
இதில் வீடு முழுவதும் தீயில் எரிந்து நாசாமாகியது. இது குறித்து தகவலறிந்த வேப்பூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் சிறுபாக்கம் போலிசார் வழக்கு பதிவு செய்து ஜெயவேலை கைது செய்தனர்.
