Phone/WhatsApp : +91 72000 33317

Reg.No. TN-02-0040998

ராஜினாமாவை அறிவித்தார் மகாராஷ்டிரா கவர்னர் பி.எஸ்.கோஷ்யாரி… பின்னணி என்ன?

images-2023-01-23T180523.811-16744773603x2

80 வயதாகும் மூத்த அரசியல்வாதியான கோஷ்யாரி மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.

மகாராஷ்டிர கவர்னர் பகத் சிங் கோஷ்யாரி தனது ராஜினாமா அறிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது விருப்பத்தை பிரதமர் மோடியிடம் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த நிகழ்வு மகாராஷ்டிர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர கவர்னராக கோஷ்யாரி கடந்த 2019 செப்டம்பர் மாதம் பொறுப்புக்கு வந்தார். அப்போது சிவசேனா தலைமையிலான அரசு மாநிலத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருந்தது. அந்த சூழலில் மாநில அரசுக்கும் கவர்னருக்கும் இடையே மோதல் போக்கு கடுமையாக இருந்ததாக தகவல்கள் வெளிவந்தன. மாநிலத்தில் அரசியல் குழப்பம் ஏற்பட்டபோது, தேவேந்திர பட்னாவீசுக்கு அதிகாலையில் இவர்தான் பதவி பிரமாணம் செய்து வைத்து கவனம் பெற்றார்.

கொரோனா நேரத்தில் கோயில்களை திறப்பது, கோவாவிற்கு மாட்டு இறைச்சி ஏற்றுமதி செய்வதற்கு தடை, டேராடூன் செல்ல கவர்னருக்கு விமானம் மறுப்பு உள்ளிட்ட விவகாரங்களில் முந்தைய சிவசேனா அரசுக்கும் கவர்னர் கோஷ்யாரிக்கும் இடையே மோதல் போக்கு காணப்பட்டது. இந்த நிலையில் கவர்னர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்யவுள்ளதாக கோஷ்யாரி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது- எனக்கு 3 ஆண்டுகளாக மகாராஷ்டிர மக்கள் அளித்த அன்பையும் ஆதரவையும் என்னால் மறக்கவே முடியாது. பிரதமர் மோடி சமீபத்தில் மும்பைக்கு வந்திருந்தபோது, நான் ராஜினாமா செய்வதாக எனது விருப்பத்தை  அவரிடம் கூறி விட்டேன். அனைத்து விதமான அரசியல் நடவடிக்கைகளில் இருந்தும் ஓய்வு பெறவுள்ளேன்.

என் வாழ்நாளில் மீதம் உள்ள நாட்களை படிப்பதிலும், எழுதுவதிலும்,  கழிப்பதற்கு விரும்புகிறேன். பிரதமர் மோடி என் மீது எப்போதும் அன்பும் ஆதரவும் வைத்துள்ளார். அவை எப்போதும் எனக்கு கிடைக்கும் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். கோஷ்யாரியின் ராஜினாமா அறிவிப்பு மகாராஷ்டிர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோஷ்யாரி உத்தராகண்ட மாநிலத்தின் முதல்வராக பொறுப்பில் இருந்தவர். 80 வயதாகும் மூத்த அரசியல்வாதியான கோஷ்யாரி மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.

Share on facebook
Facebook
Share on google
Google+
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on whatsapp
WhatsApp